கடந்த வாரம் கண்டிப்பாக சச்சின் வாரம்! இதோ! இந்த இடுகை எழுதும் சமயத்திலும் சச்சின் ஆட்டமிழக்காமல் 191 ரன்கள். ICC விருது, முதல் டெஸ்டில் 98, 38. டெஸ்ட் போட்டிகளில் 14,000 ரன்களைக் கடந்த முதல் வீரர். இடுகையை நீங்கள் வாசிக்கும் நேரத்தில் சச்சின் 200 ரன்களை கடந்திருக்கலாம்!
49 ஆவது சதம்! இரண்டு சிக்ஸர் அடித்து சதத்தை நிறைவு செய்தார் சச்சின். சிக்ஸரால் சச்சின் சதமடிப்பது 5 ஆவது முறை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 11 ஆவது சதம் மற்றும் ஆறாவது முறை 150 ரன்களுக்கு மேல்! 20 ஆவது முறையாக 150 ரன்களுக்கு அதிகமாகப் பெற்று லாராவின் சாதனையை (19 முறை) முறியடித்திருக்கிறார்.
சச்சின் வாங்காத விருது அனேகமாக ICC Cricketer of the Year விருது மட்டுமே. அந்தக் குறையும் ரசிகர்களுக்குத் தீர்ந்தது. Cricketer of the Year மற்றும் People's Choice Award என இரண்டு விருதுகள்! ICC க்கு நன்றிகள். இன்னும் பல விருதுகள் காத்திருக்கின்றன!

20 வருடங்களுக்கும் மேலாக கிரிக்கெட்டின் மீதுள்ள நேசமும், அர்ப்பணிப்பும் சச்சினுக்கு மேலும், மேலும் புகழ் சேர்க்கிறது. இன்னும் பல சாதனைகளை சச்சின் நிகழ்த்துவார். தனது சாதனைகளுக்காக விளையாடுபவர் என்ற அரைவேக்காட்டு விமர்சனங்களுக்கு சச்சின் தனது ஈடற்ற திறமையால் எப்போதோ பதில் சொல்லிவிட்டார். வாழ்த்துக்கள் சச்சின்!

No comments:
Post a Comment