இறைவன் அனைவர்க்கும் பொதுவானவன் .அவனை வணங்கி ஆறாதிபோம்
எம்மதமும் சம்மதம்
யானயினுடய முகம் படைத்தவரும், பூதகணங்களால் ஸேவிக்கப்படுபவரும், பழுத்த ஜம்பூ பழத்தின் ரசத்தை சாப்பிடுபவரும், உமாவின் (பார்வதீ தேவியின்) குமாரரும், நம்முடைய துக்கத்தைப் போக்குவதற்குக் காரணபூதராக விளங்குபவரும், விக்னங்களுக்கே (தடங்கல்களுக்கு) ஈஸ்வரரும் (அதிபதி) ஆகிய கணபதி பகவானின் பாதகமலங்களில் தண்டனிடுகிறேன்.
விளக்கம்:
எந்த ஒரு காரியம் எடுத்துக்கொண்டாலும் முதலில் விக்னமில்லாமல், தடை இல்லாமல் அது நடந்தேற கணபதி வணக்கம் செய்வது அவசியம். ஏன்? பெரிய தலை ஞானத்தைக் குறிக்கிறது. மூளை இருக்குமிடம் தலை. அது பெரிதாக இருக்கு என்றால் பரம ஞானி, ஞானத்தின் இருப்பிடம் என்று கொள்ள வேண்டும். கணபதி ஞானத்திற்கு அதிபதி. பூதகணங்கள் என்றால் உங்களுக்குத் தெரிந்த பயமுறக்கூடிய் சரீரமுடனும், முரட்டுத்தனமாக செயல் புரிந்துவருகிற துஷ்டர்களைக் குறிக்கலாம். ஆனால் இங்கு நாம் கோள்ள வேண்டிய ஸாரமானது:நம் தேகத்தில் உள்ள ஒவ்வோரு அணுவிலும் சக்தி திரண்டிருக்கிறது. ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தேவதை குடிகொண்டிருக்கிறது. கால், கை, முகம், கண், செவி, மூக்கு போன்ற ஒவ்வொரு அங்கமும் சரிவர இயங்க வேண்டுமானால் அவைகளுக்கு சக்தி வேண்டும். அது யாரால் தரப்படுகிறது? அதுதான் ஒவ்வொரு தேவதைகள் குடிகொண்டு அதை இயக்குகிறார்கள். இந்த தேவதைகளுக்கு ஊக்கம் தருபவர் கண்பதி பகவான். நம்மைப்போல் பஞ்சபக்ஷ பரமான்னம் சாப்பிடக் கூடியவரா கணபதி? இல்லை. மித ஆகாரம், ஆனால் நல்ல ஸத்து தரும் உணவு, ஜம்பு பலத்தை மட்டுமே சாப்பிட்டு வருபவர். அதாவது ஆசயை அடக்கியவர் என்று பொருள். ஆகாரம் என்றால் உணவு மட்டுமல்ல. உலக விஷயங்களில நமக்குள்ள ஆசை. அதை அடக்கியவர் என்று பொருள். தடங்கலை அடக்கும் சக்தி பெற்றவர், நம் துக்கத்தைப் போக்கடிக்கக் கூடியவர். அப்பேற்கொத்த விநாயகனை முதலில் ஸேவித்தால் சைய்யப்போகும் காரியம் தடையில்லாமல் ஸுலபமாக அமையும் என்று பொருள். இயேசு கிறிஸ்து
பாவங்களை தீர்ப்பவர் கருணை வடிவானவர் கர்த்தர் .
கருணை கடலாம் கர்த்தரை தொழுவோம்
அல்லா
வானவர்க்கும் நின்னுடைய தூதருக்கும்
மறைதேளிந்த மற்றை யோற்கும்
பேரோழியாய் ஓங்கி நின்ற
ஞாமேன்னும் பரம்பொருளே
உன்னை வாழ்த்தி வணங்குகிறேன்
இவ்வாறு அணைத்து மதத்தையும் வணங்குவோம்
அனைதுமததின் கருத்தும் ஒன்றே
எம்மதமும் சம்மதம்.எம்மதத்தையும் எவரும் இழிவு செய்யகூடாது .
இதனை நாம் புரிந்துகொண்டால் மத சண்டைகள் குறையும்ன்
No comments:
Post a Comment